Sunday, July 17, 2011

ராமநாதபுரம் நகர கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்



















தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம்
ராமநாதபுரம் நகர கிளையில் கடந்த 15-7-2011 அன்று தெருமுனைக்
கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ ஜெயலாணி அவர்கள் உரை நிகழ்த்தினார்
இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் சபர் மாதம் விளக்க நோட்டிஸ்
விநியோகம் செயப்பட்டது



ததலைமையகத்தில் PRESS MEET: உயிரை காப்பாற்றிக் கொண்டு அகதிகளாக சென்னை வந்த பாலகோட் முஸ்லிம்கள்! நெஞ்சை உருக்கும் வீடியோ காட்சி!


தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு என்ற ஊரில் இஸ்லாமியர்கள் எனக்கூறிக் கொண்டு மஹதி என்ற பிரிவினர் செயல்படுகின்றனர். இவர்கள் தமிழகத்தில் இந்த ஊரைத் தவிர வேறு எங்குமே இல்லை. இவர்கள், தங்களின் மதக் குருக்களின் காலில் விழுந்து வணங்க வேண்டும் என்று அங்குள்ள முஸ்லிம்களை இத்தனை காலமும் நிர்பந்தித்து வருகின்றனர்.
பொதுவாக மஹதிகளைப் பொருத்தவரை ஒரு குணம் உண்டு. இவர்களை எதிர்க்கும் யாராக இருந்தாலும் அவர்களை அந்த ஊரில் உள்ள ஒரு தனிப்பள்ளிவாசலில் கட்டி வைத்து சித்ரவதை செய்வார்கள். முழுக்க முழுக்க இவர்கள் தங்களை ஒரு தனிப்பிரிவாகவே நினைத்துக் கொண்டு இஸ்லாம் காட்டித் தராத ஒரு தனி வாழ்க்கையை வாழ்கின்றனர்..

இந்த நிலையில் அங்கிருந்த மக்கள் சிலருக்கு ஏகத்துவக் கொள்கை கொஞ்சமாக ஊற்றெடுக்க, அவர்களின் கொள்கை இஸ்லாம் மார்க்கத்திற்கு முரணானது என்தைப் புரிந்து கொண்டு அங்குள்ள மஹதீகளுக்கு எதிராக அவர்களின் கொள்கைகளுக்கு எதிராக ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்யத் துவங்குகின்றனர்.
ஆனால் இந்த மக்கள் இதற்கு முன்னர் அந்தக் கூட்டத்தில் தான் இருந்து வந்தார்கள். அவர்களின் வழிமுறைகளைத் தான் பின்பற்றி வந்தார்கள்.
அவர்களுக்குள்ளேயே இந்த ஏகத்துவ தீபம் சுடர் விட்டு கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்ததால், அந்த மஹதீ வழிகேடர்களால் இவர்களை அடித்து உதைப்பதைத் தவிர வேறு வழியை அவர்களால் கையாள முடியவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த ஏகத்துவ சகோதரர்களை இதனால் அவர்கள் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதுபற்றி காவல்நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்ற போதும் இவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இவர்கள் புகார் கொடுக்கச் சென்ற நேரத்தில் அங்கே ஆய்வாளர் மற்றும் துனைக்கண்காணிப்பாளர் முன்னிலையிலேயே இவர்கள் மீது கொலைவெறித்தாக்குதலில் ஈடுபட்டனர் அந்த வழிகேடர்கள். காவல்துறையில் போதிய பலம் இல்லை என்று கூறி காவல்துறையினரும் கைவிரித்து விட்டனர். அதுமட்டுமின்றி இவர்களிடம்,
நீங்கள் எங்காவது தப்பித்து ஓடி விடுங்கள் இல்லாவிட்டால் அவர்கள் உங்களை கொலை செய்து விடுவார்கள் என இவர்களுக்கு அறிவுறையும்(?) வழங்கியுள்ளனர் காவல்துறையினர். இவர்களின் தாக்குதல் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
தாக்குதலுக்கு உள்ளானவர்கள் ஊர் சென்றால் தங்கள் உயிருக்கு ஆபத்து நேரிடும் என்ற அச்சத்தில் வேறு வழியின்றி கையில் காசும் இன்றி உடுத்திய ஆடையுடன் சென்னையில் இருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் தஞ்சம் புகுந்தனர். மஹதிகளின் வெறியாட்டத்தால் அகதிகளாக வந்திருக்கும் கொள்கைச் சகோதரர்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அரவனைத்து பாதுகாப்பு கொடுத்திருக்கிறது.
அந்த மஹதி வழிகேடர்களின் அயோக்கியத்தனங்களை உலகுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்ற ரீதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் இன்று(21/07/2011) பத்திரிகையாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.,
பத்திரிகையாளர்களைச் சந்தித்த அந்தச் சகோதரர்கள் தங்களின் துக்கம் தாங்காமல் அழுக ஆரம்பித்தனர். வந்திருந்த எல்லோருமே கண்ணீர் விட ஆரம்பித்தனர்.
எங்களுக்கு உடுத்துவதற்கு துணியில்லை, எங்கள் பிள்ளைகளை எங்களால் பார்க்க முடியவில்லை, சொந்த ஊருக்குள்ளே நுழைய முடியவில்லை, நாங்கள் ஏற்றுக்கொண்ட இந்தக் கொள்கைக்காக நாங்கள் இப்போது இந்த அவல நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளோம். என்ன ஆனாலும் எங்களின் கொள்கையிலோ, பிரச்சாரத்திலோ நாங்கள் பின்தங்கிட மாட்டோம். ஆனால் எங்களின் பிரச்சாரத்தை எதிர்கொள்ள வழியின்றி எங்களைக் கொலை செய்யும் நோக்கத்தில் வெறியாட்டம் நடத்திய அத்தனை பேரையும் கைது செய்து எங்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். நாங்கள் பிறந்த எங்கள் ஊருக்குள் நிம்மதியாக நடமாட எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும், இந்த வன்முறையாளர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் , எங்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்தனர்.
தப்பித்தோம் பிழைத்தோம் என சென்னை வந்த சகோதரர்கள் பத்திரிக்கையாளர் முன்பு கண்ணீர் மழ்க பேட்டியளிக்கும் வீடியோ காட்சி

அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துவான்.
அல்குர்ஆன் 61:8

            ஏர்வாடி கிருக்கனின் எகத்தாளம்


பழுலுல் இலாஹி என்பவர் சகோதரர் ஷம்சுல்லுஹா அவர்கள் மீது அவதூறான சில குற்றச்சாட்டுக்களைக் கூறி மெயில் அனுப்பியிருந்தார். பழுலுல் இலாஹியின் மெயில்களுக்குப் பொதுவாக யாரும் பதில் கூறுவதில்லை என்றாலும் இது குறித்து நமது சகோதரர்கள் சிலர் கேள்வி எழுப்பியதால் இதற்கு ஷம்சுல்லுஹா பதிலளித்திருந்தார். அந்தப் பதிலில், பழுலுல் இலாஹியின் குற்றச்சாட்டுக்களைக் குறிப்பிட்டு, இவற்றை நிரூபிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதில் தீர்வு ஏற்படாத பட்சத்தில் முபாஹலாவுக்கும் தயார் என்று கூறியிருந்தார்.
நமது ஜமாஅத் மீதும் அழைப்பாளர்கள் மீதும் இதுபோன்ற குற்றச்சாட்டுக்களைக் கூறுபவர்கள் விவாதத்திற்கு அழைத்தால் ஓடி விடுவதும் அல்லது சம்பந்தமில்லாமல் வேறு விஷயங்களுக்குத் தாவி விடுவதும் வழக்கம். அதே போன்று இந்த விஷயத்திலும் பழுலுல் இலாஹி வழக்கம் போல் உளற ஆரம்பித்து விட்டார். இது எதிர்பார்த்த ஒன்று தான்.
இந்தச் சந்தடி சாக்கில் ஏர்வாடித் திருடன் சிராஜ் என்பவன் ஒரு மெயில் அனுப்பியுள்ளான். மேலப்பாளையம் மஸ்ஜிதுர்ரஹ்மான் ஜாக்கிற்குச் சொந்தமானது என்றும் அதை ஷம்சுல்லுஹா அபகரித்து விட்டதாகவும் அதில் கூறியுள்ளான். இது தொடர்பாக முபாஹலா செய்யத் தயார் என்றும் எழுதியுள்ளான்.,
பாக்கர், ஸைபுல்லாஹ் வரிசையில் டிசம்பர் 6திருடனையும், ஏர்வாடித் திருடனையும் உள்ளே விட்டு விபச்சாரத் தளம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது செங்கி தளம்.
டிசம்பர் 6 திருடனின் பித்தலாட்டம் அம்பலமாகி விட்டதால் சட்டென்று வேறு கிளைக்குத் தாவுவது தான் இந்த மங்கியின் புத்தி என்பதால் உடனடியாக ஏர்வாடித் திருடனின் கடிதத்தை வெளியிட்டுள்ளது.
ஜாக்குக்குச் சொந்தமான பள்ளியை நாம் அபகரித்ததாக ஏர்வாடித் திருடன் புலம்பியுள்ளான். முதலில் இதைச் சொல்ல இந்தக் கொள்ளைக்காரனுக்குத் தகுதியிருக்கின்றதா?
கோடிக்கணக்கான சொத்துக்களைக் கொண்ட ஜாக் அமைப்பை மொத்தமாகக் களவாட முயன்று கையும் களவுமாக மாட்டியவன் தான் இந்த ஏர்வாடித் திருடன் என்பது ஊருக்கே தெரியும். எஸ்.கே.யை ஓவர்டேக் செய்து ஜாக்கைக் கைப்பற்றி விட்டால் பல கோடி சொத்துக்குச் சொந்தக்காரனாகி விடலாம் என்று கணக்குப் போட்டுக் காத்திருந்த இவனை தக்க சமயத்தில் அடையளாம் கண்டு வெளியேற்றினார் எஸ்.கே.
ஜாக் என்ற பெயரில் இணைய தளத்தையும் தொடங்கி,ஜாக்கின் வருவாய்களைக் கொள்ளையடிக்க இவன் போட்ட முயற்சியையும் எஸ்.கே. தனது உண்மையான ஜாக் இணைய தளத்தில் அம்பலம்படுத்தினார்.
ஒட்டுமொத்த ஜாக்கையும் களவாட நினைத்து மாட்டிக் கொண்ட இந்த ஏர்வாடித் திருடன், மேலப்பாளையத்தில் தவ்ஹீதுவாதிகளின் உழைப்பில் உருவான மஸ்ஜிதுர்ரஹ்மானை நாம் அபகரித்ததாகக் கூறுவது தான் வேடிக்கை.
இந்தப் பள்ளி யாருக்குரியது என்பதற்கான வழக்கு நீதிமன்றத்தில் இருந்து வருகின்றது. உண்மையில் ஜாக்கின் சொத்தாக இருந்தால் அதை நீதிமன்றத்தில் நிரூபித்து மீட்டுவதற்கு இவனுக்குத் திராணியிருக்கின்றதா?
ஏற்கனவே 2001ஆம் ஆண்டு சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் ஜாக் அமைப்பு இந்தப் பள்ளிக்கு உரிமை கொண்டாடி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த ஏர்வாடித் திருடனுக்குத் தெரியும்.
எனவே இனியும் இதை ஜாக் சொத்து என்ற கோணத்தில் வழக்கு தொடர்ந்தால் ஜெயிக்க முடியாது என்று தெரிந்து கொண்ட இந்த ஏர்வாடித் திருடன் குறுக்கு வழியில், தனது திருட்டுத் தனத்தை அரங்கேற்ற ஆரம்பித்தான்.
மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளிவாசலை இந்த ஏர்வாடித் திருடன் நிர்வகித்து வருவதாகவும், அதில் ஷம்சுல்லுஹா போய் இடையூறு செய்வதாகவும் 2006ஆம் ஆண்டு திருநெல்வேலி சார்பு நீதிமன்றத்தில் ஒரு மிகப் பெரிய பொய்யைக் கூறி, லட்சக்கணக்கில் பணத்தைக் கொட்டி பொய்யான ஒரு தடையுத்தரவை வாங்கிக் கொண்டு வந்தான்.
"20.11.05ல் நீக்கப்பட்டு, மேற்படியாருக்கு உரிய தகவலும் கொடுக்கப்பட்டு விட்டது. தபசில் சொத்து 30.11.05 முதல் எங்கள் சங்க நேரடி கட்டுப்பாட்டில் அதன் மாவட்டத் தலைவரால் நிர்வகிக்கப்ட்டு வரப்படுகின்றது''
"தபசில் சொத்தினை ஆக்கிரமிப்பு செய்யும் கெட்ட நோக்கில் கடந்த 27.06.06ல் தபசில் சொத்தில் அத்துமீறி நுழைந்து தபசில் சொத்தின் சுவாதீனத்தினை எடுக்க எத்தனித்தார். மேற்படி முயற்சி கடும் பிரயாசத்தால் தடுக்கப்பட்டது. இதனால் வர்மம் கொண்ட எதிர் மனுதார் ஒரு மாத காலத்தில் தான், தான் சார்ந்துள்ள அமைப்பு வழி தபசில் சொத்தின் சுவாதீனத்தினை வலுக்கட்டாயமாக எங்கள் சங்க அமைப்பிடமிருந்து எடுக்க இருப்பதாக ஊரில் கடந்த 02.07.06ல் இருந்து பிரஸ்தாபம் செய்து வருகிறார்''
என்று ஏர்வாடித் திருடன் நீதிமன்றத்தில் தெரிவித்தான்.
மஸ்ஜிதுர்ரஹ்மான் கட்டுமானப் பணி துவங்கியது முதல் இன்று வரை அதை நிர்வகித்துக் கொண்டிருப்பது யார் என்பது ஊருக்கு மட்டுமல்ல உலகத்திற்கே தெரிந்த உண்மை. அந்த உண்மையை மறைத்து நீதிமன்றத்தில் பொய்யான தடையுத்தரவு பெற்றவன் தான் இந்த உலகமகாப் பொய்யன். இந்தத் திருடன் மஸ்ஜிதுர்ரஹ்மானுக்கு வந்தது கூடத் தெரியாது. மஸ்ஜிதுர்ரஹ்மானில் எத்தனை தளம் உள்ளது என்பது கூட இவனுக்குத் தெரியாது. இருப்பினும் மஸ்ஜிதுர்ரஹ்மானைத் தான் நிர்வகிப்பதாகவும் அதன் ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுப்பதாகவும், மின் கட்டணம் செலுத்துவதாகவும் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யை துணிந்து கூறியவன் தான் இந்த ஏர்வாடித் திருடன்.
அல்லாஹ்வின் மிகப் பெரும் கிருபையால் இவனது பொருளாதாரம் இவனுக்குக் கை கொடுக்கவில்லை. இவனது கீழ்த்தரமான பொய் காவல்துறை அதிகாரிகளுக்குத் தெரிந்து விட்டதால் இவனை மஸ்ஜிதுர்ரஹ்மானில் நுழைய அனுமதிக்கவில்லை.
ஏர்வாடித் திருடனுக்குத் துளியும் சளைத்தவரல்ல என்பதைப் போல் இவனது அப்போதைய மாநிலத் தலைவர் எஸ்.கே. நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஒரு கடிதத்தில், ஷம்சுல்லுஹாவுக்கு சம்பளம் கொடுத்து வருவதாகவும் இப்போது வேலையை விட்டு நீக்கி விட்டதால் இனி சம்பளம் கிடையாது என்று குறிப்பிட்டிருந்தார்.
20.11.05 வரை ஷம்சுல்லுஹாவுக்கு சம்பளம் கொடுத்ததாகப் பச்சைப் பொய்யை எழுத்து மூலம் வழங்கியவர் தான் ஜாக்கின் அகில உலகத்(?) தலைவர்.
ஜாக்கிலிருந்து பத்து பைசா கூட ஷம்சுல்லுஹாவுக்கு சம்பளம் கொடுத்தது கிடையாது. அதுவும் 1997க்குப் பிறகு ஜாக்குக்கும் மஸ்ஜிதுர்ரஹ்மானுக்கும் கொள்கையளவில் கூடத் தொடர்பு இல்லை. ஆனால் துளியும் இறையச்சம் இல்லாமல் துணிந்து பொய் சொல்லி வழக்கு நடத்தியவர்கள் தான் இந்தத் திருட்டுக் கூட்டம்.
ஷம்சுல்லுஹா ஜாக் பெயரில் வசூலித்து பத்து லட்ச ரூபாய் மோசடி செய்து விட்டார் என்று காவல்துறையில் பொய் புகார் கொடுத்ததும் இந்தக் களவாணிக் கூட்டம் தான்.
வக்ப் வாரியம் பள்ளியைக் கைப்பற்றிய பிறகு அது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடந்தது. அதிலும் வக்ப் வாரிய வழக்கறிஞருக்கு பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தவன் தான் இந்த ஏர்வாடித் திருடன். அந்த வழக்கிலும் அல்லாஹ்வின் மிகப் பெரும் கிருபையால் தவ்ஹீத் ஜமாஅத்திற்குச் சாதகமாகத் தீர்ப்பளிக்கப்பட்டது.
திருநெல்வேலி சார்பு நீதிமன்றத்தில் இந்தப் பொய்யர்கள் தொடுத்த வழக்கிலும் அல்லாஹ் இவர்களுக்குத் தோல்வியையே அளித்தான். இப்போது இந்த ஏர்வாடித் திருடன் சம்பந்தமில்லாமல் முபாஹலா பாட்டைப் பாடியிருப்பதற்குக் காரணம், நீதிமன்றத்தில் இவர்களுக்கு ஆதரவாக எந்த ஆதாரமும் இல்லை என்பதால் நம்மைச் சீண்டி, நாம் இவனுக்குப் பதிலளித்தால் அதிலிருந்து ஏதேனும் ஆதாரத்தை எடுத்து அதன் மூலம் இந்தப் பள்ளியை அபகரிக்கலாம் என்பது தான் ஏர்வாடித் திருடனின் நோக்கம்.
ஜாக் தலைவர் எஸ்.கே.யையும் பிறை விஷயத்தில் அவருடன் இருந்தவர்களையும் காஃபிர்கள் என்ற அளவுக்குத் திட்டிய இந்த ஏர்வாடித் திருடன், இப்போது ஜாக்கின் சொத்து என்று சொந்தம் கொண்டாடுகிறான் என்றால் ஆதாயம் இல்லாமல் இவன் ஆற்றில் இறங்க மாட்டான். இந்தத் திருடனைப் பற்றித் தெரிந்து கொண்டதால் தான் இவனை எஸ்கே கழற்றி விட்டார். தன்னுடைய வெப்சைட்டிலும், ஜன்னத் இதழிலும் இவனைப் பற்றி எச்சரிக்கை விடுத்தார்.
ஜாக் அமைப்பின் அதிகாரப்பூர்வ இணைய தளம் இருக்கும் போது, அந்த அமைப்பிலிருந்து தூக்கி வீசப்பட்ட ஏர்வாடி கிருக்கன் சிராஜ், ஜாக் பெயரில் ஒரு போலி இணைய தளத்தை உண்டாக்கி மக்களை ஏமாற்ற முயன்றான். அந்த பைத்தியக்காரனின் செயலை வெளிப்படுத்தி கமாலுதீன் மதனி வெளியிட்டிருந்த செய்தி.

இப்போது சந்தடி சாக்கில் மீண்டும் ஜாக்கைக் கைப்பற்ற இவன் நடத்தும் நாடகம் தான் இந்த முபாஹலா ஸ்டண்ட்.
இதில் ஏர்வாடித் திருடன் சம்பந்தமில்லாமல் மஸ்ஜிதுர்ரஹ்மானுக்குப் பக்கத்திலுள்ள நிலம் குறித்தும் எழுதியுள்ளான். இந்த இடம் முழுக்க முழுக்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கட்டுப்பாட்டிலுள்ளது. நிலம் பதிவு செய்யப்பட்ட காலத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முழுமையாக ஒருங்கிணைக்கப்படாத கட்டத்தில் தலைமையின் முழுமையான வழிகாட்டுதலில் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டதாகும். பல்வேறு பகுதிகளில் இந்தத் திருட்டுக் கும்பல் பள்ளிவாசல்களை அபகரிப்பதற்காகச் சுற்றிக் கொண்டிருந்ததால் இவர்களிடமிருந்து சட்டப்படி பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக பதிவு செய்யப்பட்ட தவ்ஹீத் ஜமாஅத்தின் பெயரில் இந்த நிலம் வாங்கப்பட்டது. ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக இந்த ஏர்வாடித் திருடன் இதைக் குறை கூறியுள்ளான். இதைச் சொல்ல இந்தத் திருடனுக்குத் தகுதியிருக்கின்றதா?
திருநெல்வேலி சார்பு நீதிமன்றத்தில் ஏர்வாடித் திருடன் தாக்கல் செய்த பிரமாணத்தில் கூறியுள்ளதைப் பாருங்கள்:
"எங்கள் சங்கம் சென்னை புதுப்பேட்டை, 26, அய்யாசாமி தெருவில் தற்போது பதிவு அலுவலகத்தினை கொண்டு விளங்குகிறது. அதன் பதிவு எண் 105/89 ஆகும். மேற்படி சங்கம் தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது ஆகும். மேற்படி சங்கத்திற்கு என உபவிதிகளும் உள்ளது. எங்கள் சங்கத்திற்கு தமிழ்நாடு முழுவதும் உபகிளைகள் உள்ளது. மேற்படி உபகிளைகள் அந்தந்த மாவட்டத் தலைவரால் நிர்வாகம் செய்யப்பட்டு வரப்படுகிறது. அந்த வகையில் வழக்குச் சங்கதி திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் கிளை தொடர்பானது. அதன் பதிவு எண் 107/2000. எனவே இவ்வழக்கு மாவட்டத் தலைவரால் தாக்கல் செய்யப்படுகிறது''
ஜாக் என்பது மாநில அமைப்பு; அதன் பதிவு எண் 105/89,மேலப்பாளையம் கிளை அமைப்பு அதன் பதிவு எண்107/2000 என்று கூறும் இந்தத் திருடன் நமது பதிவைக் குறை கூறுகிறான். இதைப் பற்றிப் பேசுவதற்கு இவனுக்குத் துளியும் அருகதை இல்லை என்பதற்காகவே இதை இங்கு குறிப்பிட்டுள்ளோம்.
இப்படிப் பொய்யிலேயே ஊறிய இந்தத் திருடன் தான் நாம் பொய் சொல்வதாகக் கூறி முபாஹலாவுக்கு அழைத்துள்ளான். முபாஹலா என்றால் பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று பரஸ்பரம் அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதாகும். அந்த அல்லாஹ்வின் மீது இந்தத் திருட்டுக் கும்பலுக்கு நம்பிக்கை இல்லாததால் தான் நீதிமன்றங்களிலும் காவல் நிலையங்களிலும் பொய்களைக் கூறி வழக்குத் தொடுத்தனர். அந்தப் பொய் வழக்குகளை அல்லாஹ் தவிடுபொடியாக்கி விட்டதால் நம்மிடமிருந்து ஏதேனும் பிடி கிடைத்தால் அதைக் கொண்டு மீண்டும் பள்ளி அபகரிப்பை அரங்கேற்றலாம் என்ற நோக்கத்தில் தான் இந்த ஏர்வாடித் திருடன் சந்தடி சாக்கில் முபாஹலா சவடால் விட்டுள்ளான்.
இந்தப் பொய்யனின் முபாஹலா அழைப்பை ஏற்க நாம் தயாராகவே இருக்கிறோம்.
1. மேலப்பாளையம் மஸ்ஜிதுர்ரஹ்மானுக்காக நிலம் வாங்கியது யார்?
2. அதில் பள்ளி கட்டியது யார்?
3. இதற்காக ஜாக் வழங்கிய தொகை எவ்வளவு?
4. இந்தப் பள்ளியை நிர்வகித்து வருவது யார்?
5. ஏர்வாடித் திருடன் நிர்வாகம் செய்து கொண்டிருந்த போது ஷம்சுல்லுஹா வந்து தகராறு செய்தாரா?
6. பள்ளிவாசல் ஊழியர் சம்பளம், மின் கட்டணம், சொத்து வரி போன்ற செலவுகளை ஏர்வாடி சிராஜ் அல்லது எஸ்.கே. செய்தனரா? எவ்வளவு செலவு செய்தனர்?
6. ஷம்சுல்லுஹாவுக்கு ஜாக் தலைவர் எஸ்.கே. சம்பளம் கொடுத்தாரா? எவ்வளவு கொடுத்தார்? அதை 2005ஆம் ஆண்டு நிறுத்தினாரா?
7. ஷம்சுல்லுஹா பள்ளிவாசலுக்கு வசூல் செய்து பத்து லட்ச ரூபாய் மோசடி செய்தாரா?
8. ஏர்வாடி சிராஜின் நிர்வாகத்தில் ஷம்சுல்லுஹா தலையிடக் கூடாது என்று இடைக்கால உறுத்துக் கட்டளை பெறுவதற்காக ஏர்வாடித் திருடன் செய்த தில்லுமுல்லுகள் என்னென்ன? இதற்காக வழங்கிய லஞ்சம் எவ்வளவு?
உள்ளிட்ட அனைத்து விஷயங்கள் பற்றியும் முபாஹலா செய்யத் தயார். முபாஹலாவுக்கு முன் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம், மேற்படி குற்றச்சாட்டுக்களை நேருக்கு நேர் விவாதித்து நிரூபிக்க வேண்டும். அவ்வாறு நேருக்கு நேர் ஆதாரங்களைக் காட்டி விவாதித்த பின்னர் முபாஹலா செய்ய வேண்டும். இதற்கு நாம் தயார் என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். இதற்கு ஏர்வாடித் திருடன், இவனது கும்பலின் தலைவர் எஸ்.கே. இந்தச் செய்தியை தனது விபச்சாரத் தளத்தில் பதிவு செய்த செங்கிஸ்கான் ஆகியோரையும் அழைத்து வர வேண்டும் என்று இதன் மூலம் கேட்டுக் கொள்கிறோம்.
இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் நிறைய பைத்தியக்கார மையங்கள் இருக்கின்றன. அங்கே இருக்க வேண்டிய இந்த சிராஜ் என்ற கிருக்கன் தப்பிப்போய் நெல்லை ஏர்வாடியில் இருக்கிறான் என்பது தான் உண்மை.

 வளைகுடா வரவு வற்றி விட்டதா, அதனால் தான் தமிழன் டிவியில் நிகழ்ச்சிகள் முடிக்கப்பட்டு விட்டதா என்று ஒரு லூசு கேட்டுள்ளதே!
- வரிசை முஹம்மது, வாணியம்பாடி.
ததஜவின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் 10.30 மணிக்கு ஒளிபரப்பப்படுவதால் பலருக்கு பார்க்கமுடியாத சூழ்நிலை உண்டாகின்றது என்பதற்காகத்தான் தமிழன் தொலைக்காட்சியில் 9 மணி ஸ்லாட் வாங்கப்பட்டது. நல்ல முறையில் சென்றுகொண்டிருந்த அதை நடத்த முடியாமல் கடும் நிதிச்சுமை ஏற்பட்டது. அதனால் டிவி நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. இதிலே என்ன இருக்கின்றது?இதிலே பொய்யன் கூட்டத்தாருக்கு என்ன மகிழ்ச்சி. வளைகுடா வரவு வற்றி விட்டாலும் கூட மொத்தமாக இல்லாமல் போய்விட்டாலும் இந்த ஏகத்துவப் பிரச்சாரம் நின்று விடுமா? மொத்தமாக எந்த டிவியும் இல்லாவிட்டால் கூட எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் தெருத்தெருவாக, வீடுவீடாக சென்று பிரச்சாரம் செய்யக்கூடிய கொள்கைப் போராளிகளைக் கொண்டது டி.என்.டி.ஜே.
* ஜமாஅத் பெயரைச் சொல்லி 10 முதல் 11 மணிவரை நிகழ்ச்சி நடத்திய பொய்யன் நள்ளிரவில் ஓசி நிகழ்ச்சி நடத்தும் நிலைக்கு வந்தாரே அதற்கான காரணத்தை சொல்ல முடியுமா?
-K.அசாருதீன், அதிராம்பட்டினம்.
ததஜ செய்யும் நற்பணிகளையும், தவறு செய்பவன் பொதுச்செயலாளராக இருந்தாலும் அவன் பொறடியில் தட்டி வெளியேற்றும் விதம் கண்டு மக்கள்
இந்த ஜமாத்தை நம்புகிறார்கள். நன்கொடைகளைத் தருகிறார்கள். முதியோர் இல்லத்திற்காக தன்னுடைய முழுவீட்டைத் தந்து உதவி செய்தார் ஒரு சகோதரர்.
வெளிநாடுகளிலோ அல்லது மற்ற எந்த ஊர்களிலாவது அல்லது எந்தக் கிளையிலாவது கட்டாய சந்தா வசூலிக்கப்படுகிறதா? அல்லது வேறு ஒரு இயக்கத்தின் பெயரைச் சொல்லி வசூலிக்கப்படுகின்றதா? அல்லது கள்ளரசீது அடித்து எங்காவது வசூல் செய்யப்படுகின்றதா? யாராவது சொல்ல முடியுமா?
ஆனால் இங்கிருந்து வெளியாக்கப்படும் கழிவுகளை ஒன்றுதிரட்டி அதற்கு ஒரு பெயர்வைத்து அமைப்பு நடத்தக்கூடிய இந்த இந்திய செப்டிக் டேங்க் ஜமாத்தினர் இப்போது வளைகுடா வரவுக்கு ஊற்றுக்கண் போடுவதற்காக அண்ணன் ஜமாத்திலிருந்து அள்ளிவீசப்பட்டவர்களை ஒன்றுதிரட்டியும், பீஜேவை எதிர்ப்பதற்காக மலம் திண்ணக்கூட தயாராக இருக்கும் போர்ப்படைத் தளபதிகளை ஒன்று சேர்த்தும் தங்கள் பிரச்சாரத்தை செய்துவருகின்றார்கள். இவர்கள் செய்யும் பிரச்சாரம் இஸ்லாமிய பிரச்சாரமா அல்லது பீஜே எதிர்ப்புப் பிரச்சாரமா என்பதை அந்தக் கூட்டத்திற்கு சென்றவர்களுக்கு தெரிந்து இருக்கும்.
* பித்னாக்களின் தலைவன் செங்கிஸ்கான் தன் இணையதளத்தை மூடிவிடத்தயார் என சவால் விட்டிருக்கிறாரே. அதற்கு உங்கள் பதில் என்ன?
-பீர் முஹம்மது, சொரண்டை.
நாமும் நம் இணையதளத்தை மூடிவிடத்தயார் தான். ஆனால் அதற்கு முன்னதாக அவர்கள் இந்திய செப்டிக் டேங்க் ஜமாத்தை(ISTJ) மூடிவிடத் தயாரா? அவர்கள் அமைப்பு நடத்தினால் உங்களுக்கு என்ன என்று கேட்கலாம். அவர்கள் அமைப்பு நடத்துவதே அவதூறு சொல்வதற்காக எனும் போது அதை நாம் எதிர்கொள்ள இந்த தளத்தை நடத்தித் தான் ஆக வேண்டும்.
நாம் தான் அவதூறுகளை அள்ளித் தெளிக்கிறோம் என்று சொல்கிறார் சொங்கி. ஆனால் நடப்பது என்ன தெரியுமா?நமது இணைய தளம் எந்த நேரத்திலும் அவர்கள் மீது ஒரு அவதூறைச் சொன்னது இல்லை. அவர்கள் சொல்லும் அவதூறுகளுக்கு பதில்தான் சொல்கிறோம். இல்லாத ஒன்றைச் சொல்லும் போது வார்த்தைகள் தடிக்கத்தான் செய்யும். அவர்கள் சொல்லும் எத்தனையோ விசயங்களுக்கு நாம் ஆதாரத்துடம் பதில்களை அள்ளிக் கொட்டுகிறோம். ஆனால் அவர்கள் இதெற்கெல்லாம் அமைதிகாக்கிறார்கள். நாம் ஆதரப்பூர்வமாக வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு அவர்களால் பதில் தர இயலவில்லை. மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள். ஆனால் நாம் தான் அவதூறு சொல்கிறோம் என இவர்கள் பேட்டி வேறு கொடுத்துக் கொள்கிறார்கள்.
* ஐந்து கடமைகளும் அண்ணனின் நிலையும் என ஒரு பெரிய பட்டியலே போட்டிருக்கிறாரே செங்கிஸ்கான். அதற்கு உங்கள் பதில் என்ன?
- அரும்பாக்கம் அஹமது
அண்ணனுக்கு கலிமா இல்லை, தொழுகை இல்லை,நோன்பு இல்லை, ஜகாத் இல்லை, ஹஜ் இல்லை என எல்லாவற்றையும் பட்டியல் போட்டு இருக்கிறார் சொங்கி. இது உண்மையாகவே இருந்தாலும் கூட இதிலே சொங்கிக்கு என்ன வந்ததாம்? அவருக்கு இதெல்லாம் இல்லை என்றால் அதுபற்றி அவர் மறுமையில் பதில் சொல்லிக் கொள்வார்.
இஸ்லாமியக் கொள்கையை பீஜேதான் உருவாக்கினார்,ஆனால் அதைச் சொல்லும் அவரே அதைப் பின்பற்றுவதில்லை என்று சொன்னால் ஒரு நியாயம் இருக்கிறது.
ஆனால் பீஜே ஒரு சாதாரண பிரச்சாரி மட்டுமே! அவர் சொல்வது சரியாக இருக்கிறது. அல்லாஹ்வை மட்டும் வணங்குங்கள் என்கிறார், முஹம்மது நபி(ஸல்) அவர்களை மட்டும் பின்பற்றுங்கள் என்று அவர் சொல்கிறார். அது சரியாக இருந்தால் மக்கள் அவரைப் பின்பற்றுகிறார்கள். சொல்லும் அவர் அதைச் செய்யாவிட்டால் நாளைக்கு அவர் பதில் சொல்லிக் கொள்வார். அங்கே சென்று செங்கிஸ்கான் சாட்சி சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது.
அண்ணனின் கொள்கை உறுதி (கலிமா) - அது அவருக்கும் அல்லாவுக்கும் மட்டும் தான் தெரியும்.காரணம் மனிதன் மறைவானவற்றை அறியமாட்டான்.
அண்ணனின் தொழுகை - அண்ணன் எந்தப் பள்ளியிலும் தொழுகப் பார்த்ததில்லை என்று சொல்லும் செங்கிஸ்கான் இதை எப்படி மக்களிடம் கொண்டு செல்கிறார் என்று கொஞ்சம் புரிந்து கொள்ளலாம்.
ஒருவன் சென்னையில் இருந்து திருச்சி செல்கிறான். அங்கே உள்ள மர்க்கஸில் போய் தொழுகிறான். முடித்து விட்டு அங்கே தேடுகிறான் பீஜேவைக் காணவில்லை. பின்னர் திண்டுக்கல் செல்கிறான் அங்கேயும் தேடுகிறான் பீஜே இல்லை. பின்னர் திருவனந்தபுரம் செல்கிறான். அங்கேயும் தேடுகிறான், பீஜேவைக் காணவில்லை. உடனே சொல்கிறான் பீஜே எங்குமே தொழுவதே இல்லை என்று.
3 வருடம் பொருப்பில் இல்லாத போது பீஜே தலைமையகம் பக்கமே வருவதில்லை. உண்மை தான். தலைமையகம் பக்கம் வந்தால் இவர் நிர்வாகத்தில் மூக்கை நுழைக்கிறார் என்ற எண்ணம் வரும். அதனால் வராமல் இருக்கிறார். ஆனால் இந்த நிலை மாறிய பின்னர் பெரும்பாலும் அலுவலகத்தில் தான் இருக்கிறார். அலுவகத்தில் உள்ள பள்ளியில் தான் தொழுகிறார். ததஜவில் உறுப்பினராக இருக்கும் ஒருவர் அதுவும் மண்ணடியில் வசிக்கும் ஒருவர் தலைமையகத்தில் மட்டும் தான் வந்து தொழவேண்டும் என எந்தச் சட்டமும் இல்லை.
இணை வைக்காத இமாம் வேலை செய்யும் பள்ளிகள் கூட அல்லாஹ்வின் இல்லம் தான். அங்கே சென்று தொழுவதில் எந்தத் தவறும் இல்லை. அப்படியானால் ஏன் தனிப்பள்ளி என்று கேட்கலாம். 5 வேளை தொழுகை தவிர்த்து மற்ற நேரங்களில் இருக்கும் பித்அத்கள் ஷிர்க்குகளை முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும் என்பதால் தான் .
5 வேளைத் தொழுகைக்கு செல்வதற்கு இணை வைக்காத இமாம் தொழவைக்கும் பள்ளிக்குச் சென்று தொழுவதில் தவறில்லை.
அண்ணனின் நோன்பு - நோன்பு எனக்கும் என் அடியாருக்கும் உள்ள நேரடி வணக்கமாகும். அதனால் தான் அதற்கு அவனே கூலி தருகின்றான் என சொல்கிறான். அதனால் அண்ணனின் நோன்பு குறித்த கவலை யாருக்கும் வரவேண்டியதில்லை.
அண்ணனின் ஜகாத் - அவர் கொடுக்கிறாரா இல்லையா என்பது அவரிடம் வாங்கியவர்களுக்கு மட்டுமே தெரியும். தேவைப்பட்டால் இந்த வருடம் மாறுவேடம் போட்டுக்கொண்டு வந்து செங்கிஸ்கானும் அவரது வகையறாக்களும் அவரின் வீட்டு வாசலுக்குச் சென்று ஜகாத் கேட்டுப் பார்க்கலாம். ஆனால் மற்றவரின் காசுகளை மோசடி செய்துமட்டுமே பழக்கப்பட்ட செங்கிஸ்கான் ஜகாத் வாங்க வரமாட்டார் என்பது எல்லாருக்கும் தெரியும்.
கேவலம் பத்தாயிரம் ரூபாய் ரூபாய் மோசடி செய்ததற்காக மட்டும் தான் செங்கிஸ்கான் ததஜவில் இருந்து நீக்கப்பட்டார் என்பது எல்லாருக்கும் தெரியும்.
அண்ணனின் ஹஜ்: பிரைவேட் ஹஜ் சர்வீஸை தடைசெய்ய வேண்டும். அவர்கள் மார்க்கத்தை வியாபாரம் செய்கிறார்கள் என்று ஊருக்கெல்லாம் சொல்லிவிட்டு இவர் மட்டும் பிரைவேட் ஹஜ் சர்வீஸில் ஹஜ் செய்தால் மக்கள் ஒப்புக்கொள்வார்களா? கொஞ்சம் தளர்த்திக் கொண்டு பிரைவேட் ஹஜ் சர்வீஸை மட்டும் ததஜ ஆதரித்தால் போதும். பிரைவேட் ஹஜ் சர்வீஸ் விளம்பரங்கள் வந்து கொட்டும். தமிழன் டிவியில் அல்ல. அதை வைத்து சன் டிவியில் கூட ஸ்லாட் வாங்கலாம்.
அரசு ஹஜ் சர்வீஸில் சென்றால் குலுக்கல் முறையில் பெயர் வராவிட்டால் 4 முறைக்கு பிறகு நேரடியாகவே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற விதியின் படி இறைவன் நாடினால் அண்ணன் இந்த வருடம் ஹஜ் செய்ய இருக்கிறார். அண்ணன் மீது கடும் அக்கறை கொண்ட செங்கிஸ்கான் ஒரு லிட்டர் மண்ணென்னையக் குடித்து விட்டு ஏதாவது பரோட்டா அடுப்பில் ஏறி உக்கார்ந்து தன் வயிற்றெரிச்சலைத் தீர்த்த்துக் கொள்ளட்டும்.
இதெல்லாம் சரியப்பா! அண்ணன் அடுத்தவர் பணத்தை மோசடி செய்தார், பொம்பளைய கையப்புடிச்சி இழுத்தார்,அடுத்தவனின் கள்ளக்காதலியோடு
செல்போனில் கடலை போட்டார், அண்ணியப்பெண்ணை வரவழைத்து பட்டுப்புடவை எடுத்து கொடுத்தார், ஏசி பஸ்ஸில் பக்கத்து பக்கத்து சீட்டில் உக்கார வைத்துக்கொண்டு பயணம் செய்தார், விவாதத்திற்கு சென்ற இடத்தில் தனியாக இருந்த ஒரு பெண்ணுக்கு தனியாக சென்று உதவி செய்தார், தான் ஸ்பான்சர் கொடுத்த வளர்த்த பெண்ணுக்கே வலை விரித்தார், பங்கு முதலீடு என்று சொல்லி அடுத்தவன் காசை அபகரித்தார், ஜமாத் பெயரைப் பயன்படுத்தி வசூல் செய்து அந்த காசில் இடம் வாங்கி தன் சகலையின் பெயரில் பதிவு செய்தார் என இதுபோல ஏதாவது ஒரு குற்றச்சாட்டுகளை ஆதாரப்பூர்வமாக வைத்தால் மிக நன்றாக இருக்கும். அதை விடுத்து விட்டு ஐந்து கடமைகளும், அண்ணனின் நிலையும் என்ற பெயரில் எதையாவது எழுதி ஏன் செருப்படி பட வேண்டும் என செங்கிஸ்கானிடம் கேளுங்கள்

No comments:

Post a Comment